உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கிணற்றில் விழுந்த புள்ளி மான் மீட்பு

கிணற்றில் விழுந்த புள்ளி மான் மீட்பு

மேட்டூர்: கொளத்துார், மூலக்காட்டை சேர்ந்த விவசாயி சின்னதம்பி, 60. அவரது நிலம் பாலமலை அடிவாரம் உள்ளது. அங்கு நேற்று அதிகாலை தண்ணீர் தேடி வந்த ஆண் புள்ளி மான் தவறி, அங்குள்ள, 25 அடி ஆழ கிணற்றில் விழுந்தது. தண்ணீர் குறைவாக இருந்ததால், மான் கிணற்றில் ஒரு பகுதியில் ஒதுங்கி பாதுகாப்பாக நின்றது. கொளத்துார் வனவர் ராஜேஷ் உள்ளிட்ட வனத்துறையினர், நிலைய அலுவலர் வெங்கடேஷ் தலைமையில் தீயணைப்பு துறையினர், காலை, 10:00 மணிக்கு புள்ளி மானை உயிருடன் மீட்டு பாலமலை வனப்பகுதியில் விட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை