எஸ்.எஸ்.ஆர்.எம்., பள்ளி மாணவிகள் அபாரம்
சேலம்- தமிழகத்தில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு நேற்று வெளியானது. இதில் சேலம், கருப்பூர், எஸ்.எஸ்.ஆர்.எம்., மேல்நிலைப்பள்ளி மாணவி கனிஷ்கா, 500க்கு, 493 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்தார். மாணவிகள் வைபவி, 484, அனுஷ்கா, 482 மதிப்பெண் பெற்று, 2, 3ம் இடங்களை பிடித்தனர். இந்த மாணவிகளை, பள்ளி நிர்வாக தலைவர் ஆண்டியப்பன், செயலர் சண்முகம், பொருளாளர் பன்னீர் செல்வம், அனைத்து இயக்குனர்கள், தலைமையாசிரியர் குமார் உள்ளிட்ட ஆசிரியர்கள், பெற்றோர் பாராட்டினர்.