மேலும் செய்திகள்
மாவட்ட தொடர் கிரிக்கெட்
23-Jun-2025
சேலம், தமிழக கிரிக்கெட் சங்கம் சார்பில், மாநில அளவில், 14 வயதுக்குட்பட்டோர் ஆண்கள் கிரிக்கெட் போட்டி, கடந்த மாதம் தொடங்கியது. அதன் முடிவில் இறுதிப்போட்டிக்கு சேலம் - காஞ்சிபுரம் அணிகள் தகுதி பெற்றன. சென்னையில் இரு நாட்கள் இறுதிப்போட்டி, நேற்று முன்தினம் தொடங்கியது.முதலில் விளையாடிய சேலம், 90 ஓவர்களில், 7 விக்கெட்டுகளை இழந்து, 239 ரன்கள் எடுத்தன. அடுத்து ஆடிய காஞ்சிபுரம், 43.2 ஓவர்களில், 70 ரன்கள் மட்டும் எடுத்து, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. நேற்று, 2ம் நாள் ஆட்டம் நடந்தது. அதில் சேலம், 26 ஓவரில், 1 விக்கெட் இழப்புக்கு, 156 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. அடுத்து காஞ்சிபுரம், 96 ரன்கள் மட்டும் எடுத்தன. இதனால், 229 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, சேலம் முதலிடம் பிடித்தது. அந்த அணி வீரர்கள், இன்று காலை, சென்னையில் இருந்து ரயில் மூலம் சேலம் வருகின்றனர். அவர்களுக்கு சேலம் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தினர் வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்துள்ளனர்.
23-Jun-2025