மாநில அளவிலான கேரம் போட்டி
சேலம், பள்ளி மாணவர்களுக்கான மாநில அளவிலான கேரம் போட்டி, நேற்று சேலம் நேரு கலையரங்கத்தில் துவங்கியது.தமிழக அரசு சார்பில், நடப்பாண்டுக்கான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி, 5 பிரிவுகளில் மாவட்டங்கள் தோறும் நடத்தப்பட்டது. 38 மாவட்டங்களில் முதலிடம் பிடித்த பள்ளி மாணவர்களுக்கான, மாநில அளவிலான கேரம் போட்டி சேலம் நேரு கலையரங்கத்தில் நேற்று முன்தினம் துவங்கி இன்றுடன் (அக்.,7) முடிகிறது. இதில், 38 மாணவர்கள், 38 மாணவியர் பங்கேற்றுள்ளனர். இதே போல் மாநில அளவிலான கல்லுாரி மாணவர்களுக்கான செஸ் போட்டி நேற்று துவங்கி நாளை (அக்.,8) வரையும், கேரம் போட்டி நாளை துவங்கி, 10 வரை நடக்கவுள்ளது. 11 முதல் 13 வரை அரசு ஊழியர்களுக்கான மாநில அளவிலான ஆண்கள், பெண்கள் கேரம் போட்டி நடைபெறகிறது.