மேலும் செய்திகள்
சொட்டு நீரின்றி வறண்ட ஏரி
27-Nov-2026
பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி வட்டாரத்தில் குறித்த காலத்தில் கறவை மாடுகள் சினை பிடிக்காததால் கால்நடை வளர்ப்போர் சிரமத்துக்கு ஆளாகினர். இதனால் பனமரத்துப்பட்டி கால்நடை மருந்தகம் சார்பில், கால்நடைகளுக்கு மலடு நீக்க சிறப்பு சிகிச்சை முகாம், ஏரி ரோடு பகுதியில் நேற்று நடந்தது. அடிக்கரை, கோம்பைக்காடு, ஏரி ரோடு, உலகரைமேடு உள்ளிட்ட பகுதி விவசாயிகள், கால்நடைகளை அழைத்து வந்தனர். மலட்டுத்தன்மை பரிசோதனை செய்து, இனப்பெருக்க திறனை மேம்படுத்த, மருத்துவர்கள் ஹரிஹரன், வினோத்குமார் சிகிச்சை அளித்தனர்.மேலும் ஊட்டச்சத்து உணவு பற்றாக்குறையால், மாடுகள் சினை பிடித்தல் தாமதமாகிறது. சினைப்பருவத்தை கண்டறியும் முறை, செயற்கை கருவூட்டல் செய்ய சரியான காலத்தை தேர்வு செய்தல், இனப்பெருக்க நோய்களை தடுக்கும் வழிமுறை, கருப்பை மற்றும் சினை பை நிலையை பரிசோதித்தல், இனப்பெருக்க திறனை மேம்படுத்துவதன் மூலம் பால் உற்பத்தியை பெருக்கி வருமானத்தை அதிகரிக்க முடியும் என, கால்நடை வளர்ப்போருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
27-Nov-2026