உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கிணற்றில் குளித்த மாணவர் பலி

கிணற்றில் குளித்த மாணவர் பலி

மேட்டூர், கொளத்துார், பாலமலை ஊராட்சி பாத்திரமடுவை சேர்ந்த சித்தன் மகன் பார்த்திபன், 15. இவர் அங்குள்ள ராமன்பட்டி அரசு உறைவிட பள்ளியில், 10ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று காலை, 8:00 மணிக்கு, நண்பர்களுடன் அருகிலுள்ள வெள்ளையன் விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் குளிக்கச்சென்றார். அப்போது நீச்சல் தெரியாத பார்த்திபன் தவறி கிணற்றில் விழுந்து பலியானார்.அப்பகுதி மக்கள், பார்த்திபன் உடலை மீட்டனர். தகவல் அறிந்த பழங்குடியினர் நலத்துறை சேலம் மாவட்ட திட்ட அலுவலர் சுகந்தி பரிமளம், மேட்டூர் தாசில்தார் ரமேஷ் உள்ளிட்ட வருவாய்த்துறையினர் விசாரித்தனர். விடுதிக்கு வார்டன் இல்லாததால் மாணவர்கள் வெளியே சென்று குளிக்கும் நிலை நீடிப்பதாக, பெற்றோர் குற்றம்சாட்டினர். உரிய நடவடிக்கை எடுப்பதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ