உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சுங்கச்சாவடி அருகே விபத்தில் மாணவர் பலி

சுங்கச்சாவடி அருகே விபத்தில் மாணவர் பலி

சங்ககிரி, சங்ககிரி, கொல்லங்காட்டை சேர்ந்த விவசாயி பெரியசாமி. இவரது மகன் யுவராஜ், 17. பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தார். இவரது அண்ணன் புவனேஸ்வரன். இருவரும் அவர்கள் தோட்டத்தில் விளைந்த மாம்பழங்களை விற்க, டி.வி.எஸ்., மொபட்டில், வைகுந்தம் சுங்கச்சாவடி அருகே உள்ள கடைக்கு சென்றனர். அங்கு சாலையோரம் மொபட்டை நிறுத்தி விட்டு நின்றிருந்தனர். அப்போது கோவையில் இருந்து சேலம் நோக்கி வந்த, ஈச்சர் லாரி, யுவராஜ் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை, மக்கள் மீட்டு, சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிய நிலையில், வழியில் உயிரிழந்தார். சங்ககிரி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை