உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மும்மொழி கொள்கைக்கு எதிராக மாணவர் இயக்கம் ஆர்ப்பாட்டம்

மும்மொழி கொள்கைக்கு எதிராக மாணவர் இயக்கம் ஆர்ப்பாட்டம்

சேலம்: சேலம் கோட்டைஎஸ்.பி.ஐ., வங்கி முன்பாக, மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.மும்மொழி கொள்கை பெயரில், கட்டாயமாக ஹிந்தியை திணித்து மீண்டும் மொழிப்போருக்கு நிர்பந்திக்கும் மத்திய அரசை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, தி.மு.க., மாநில மாணவரணி துணை செயலர் வக்கீல் தமிழரசன் தலைமை வகித்தார். மத்திய பா.ஜ., அரசை கண்டித்தும், ஹிந்தி ஆதிக்கத்துக்கு எதிராக கோஷமிட்டனர். அத்துடன் இருமொழி கொள்கைக்கு ஆதரவாக குரல் எழுப்பினர். அதன்பின், துணை செயலர் தமிழரசன் கூறுகையில், ''முதல் கட்டமாக அறவழி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். மத்திய அரசு, உடனடியாக மும்மொழி கொள்கையை திரும்ப பெற்று, தமிழகத்துக்கு சேர வேண்டிய நிதியை விடுவிக்க வேண்டும். இல்லையெனில், அடுத்தகட்டமாக, தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம்,'' என்றார்.தி.மு.க., சார்பில் கோகுல்காளிதாஸ், சுந்தர், மணிகண்டன், முகேஷ், இளஞ்செழியன், ம.தி.மு.க., சார்பில் கோகுல், இந்திய மாணவர் சங்கம் சார்பில் டார்வின், அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் நேதாஜி, முற்போக்கு மாணவர் கழகம் சார்பில் மாரியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி