மேலும் செய்திகள்
முதுநிலை மாணவர் சேர்க்கை கலந்தாய்வு
18-Aug-2025
ஓமலுார், பல்கலை மானியக்குழு(யு.ஜி.சி.,) புது பாடத்திட்டம் பெயரில், வணிகவியல், மானுடவியல், பொருளாதாரவியல், கணிதம், உடற்கல்வியியல், புவியியல், வேதியியல், ேஹாம் சயின்ஸ் மற்றும் அரசியல் அறிவியல் ஆகிய பாடத்திட்டங்களை மாற்றி வெளியிட்டுள்ளது. இது, 2,000 ஆண்டுக்கு முந்தைய பாகுபாட்டை காட்டுவதாக கூறி, அதை ரத்து செய்ய வலியுறுத்தி, இந்திய மாணவர் சங்கம் சார்பில், சேலம் பெரியார் பல்கலை முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் டார்வின் தலைமை வகித்தார். அதில், யு.ஜி.சி.,யை கண்டித்து கோஷம் எழுப்பினர். தொடர்ந்து, அதன் திருத்த நகலை எரித்தனர். பின் அதை கருப்பூர் போலீசார் தண்ணீர் ஊற்றி அணைத்தனர்.
18-Aug-2025