உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பள்ளியில் இருந்து பஸ் இயக்கத்தால் மாணவியர் மகிழ்ச்சி

பள்ளியில் இருந்து பஸ் இயக்கத்தால் மாணவியர் மகிழ்ச்சி

பள்ளியில் இருந்துபஸ் இயக்கத்தால்மாணவியர் மகிழ்ச்சிஆத்துார், அக். 25-ஆத்துார், காந்தி நகரில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், 2,300க்கும் மேற்பட்ட மாணவியர் படிக்கின்றனர். அதில் பலர், மாலை பள்ளி முடிந்து, அங்கிருந்து, 2 கி.மீ.,ல் உள்ள, ஆத்துார் புது பஸ் ஸ்டாண்ட் சென்று, பின் சொந்த ஊர் செல்கின்றனர். அப்படி நடந்து செல்லும் மாணவியர், பல்வேறு தொந்தரவுக்கு ஆளாக வேண்டியிருந்தது. இதை தவிர்க்க, தினமும் மாலை, 4:00 மணிக்கு, பள்ளியில் இருந்து ஆத்துார் புது பஸ் ஸ்டாண்டுக்கு அரசு பஸ் இயக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி நேற்று முதல், பள்ளியில் இருந்து பஸ் இயக்கப்பட்டதால் மாணவியர் மகிழ்ச்சி அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ