உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மாநில சதுரங்க போட்டி மாணவ, மாணவியர் ஆர்வம்

மாநில சதுரங்க போட்டி மாணவ, மாணவியர் ஆர்வம்

ஏற்காடு: மாநில சதுரங்க கழகம், சேலம் மாவட்ட சதுரங்க கழகம் இணைந்து, ஏற்காடு, வாழவந்தியில், மாநில சதுரங்க போட்டியை நேற்று நடத்தின. 9, 12, 16 வயதுக்குட்பட்டோருக்கான பள்ளி மாணவ, மாணவியருக்கு நடந்த போட்டியில், 267 பேர் பங்கேற்-றனர். தொடர்ந்து பொது பிரிவினருக்கு நடந்த போட்டியில், 73 பேர் பங்கேற்றனர். 6 சுற்றுகளாக போட்டி நடந்தது. 9 வயதுக்குட்-பட்டோர் பிரிவில் அகிலன், 12 வயதுக்குட்பட்டோர் பிரிவில் மித்ரன், 16 வயதுக்குட்பட்டோர் பிரிவில் ஸ்ரீநிதி ஆகியோர் முத-லிடம் பிடித்தனர். அவர்களுக்கு சைக்கிள், கோப்பை, சான்றிதழ்-களை, தனியார் பள்ளி தலைவர் சரவணன் வழங்கினார்.இதில் மாவட்ட சதுரங்க கழக தலைவர் பாலகிருஷ்ணன், செயலர் அருண், மாநில சதுரங்க கழக முன்னாள் இணை செயலர் செந்தில்வேல் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை