சாலையை கடக்க மாணவர்கள் சிரமம் பாதுகாப்பு பணிக்கு போலீசார் தேவை
பனமரத்துப்பட்டி: மல்லுார் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு மாதிரிப்பள்ளி ஆகியவற்றில், 1,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்-கின்றனர். சேலம் - நாமக்கல் நெடுஞ்சாலை, மல்லுார் ஊருக்கு வெளியே செல்கிறது. தற்போது நெடுஞ்சாலையில் மல்லுார் பிரிவில் பாலம் கட்டுமானப்பணி நடக்கிறது. இதனால் நாமக்கல், திருச்சி, மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்-களில் இருந்து வரும் வாகனங்கள், மல்லுார் அரசு மேல்நிலைப்-பள்ளி வழியே சேலம் செல்கிறது. காலை, மாலையில், ஏராள-மான வாகனங்கள், அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் மாதிரிப்-பள்ளி வழியே செல்வதால், மாணவ, மாணவியர் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.குறிப்பாக காலையில் பள்ளி தொடங்கும்போதும், மாலையில் பள்ளி விடும் நேரத்தின்போதும், பள்ளி முன் போலீசார் பாது-காப்பு பணியில் ஈடுபட்டு போக்குவரத்தை ஒழுங்குபடுத்த வேண்டும். மாணவ, மாணவியர் சாலையை கடக்கவும், சாலையோரம் நடந்து செல்லவும், வெண்ணந்துார் போலீசார் உதவி செய்ய வேண்டும் என, பெற்றோர் வலியுறுத்தி உள்ளனர்.