உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / டவுன் பஸ் படியில் தொங்கி சென்ற மாணவர்கள் கதவு இல்லாததால் தொடரும் ஆபத்து பயணம்

டவுன் பஸ் படியில் தொங்கி சென்ற மாணவர்கள் கதவு இல்லாததால் தொடரும் ஆபத்து பயணம்

தலைவாசல்: தலைவாசல் பகுதியில், அரசு பஸ்சின் படியில் மாணவர்கள் தொங்கி சென்ற வீடியோ வைரலாகி வருகிறது.சேலம் மாவட்டம், ஆத்துார் மற்றும் தம்மம்பட்டி கிளை பணி-மனையில் இருந்து ஆத்துார், தலைவாசல், கெங்கவல்லி மற்றும் பெத்தநாயக்கன்பாளையம் தாலுகா பகுதிகளுக்கு அரசு டவுன், மப்சல் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் வீரகனுாரில் இருந்து, நேற்று காலை, 7:45 மணியளவில் புறப்பட்ட அரசு டவுன் பஸ் (எண்-37), தலைவாசல் நோக்கி சென்றது.அப்போது, அந்த பஸ்சில் மாணவர்கள் சிலர், படியில் தொங்கி-யபடி பயணம் செய்தனர். அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள், இவற்றை வீடியோ எடுத்து, சமூக வலைதளதளங்களில் பதிவிட்-டனர். வீடியோ வைரலான நிலையில், தலைவாசல் போலீசார், அரசு போக்குவரத்து அலுவலர்கள் விசாரணை செய்தனர்.இதுகுறித்து, ஆத்துார் கிளை பணிமனை அலுவலர்கள் கூறிய-தாவது:ஆத்துார் கிளை பணிமனையில் இருந்து, 24 டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில், 15 ஆண்டுகள் முடிவடைந்த ஆறு டவுன் பஸ்கள், 2026 அக்., வரை ஓராண்டுக்கு நீட்டிப்பு செய்து இயக்கப்படுகிறது. புதிதாக இயக்கப்பட்ட டவுன் பஸ் உள்பட மப்சல் பஸ்களில், பாதுகாப்பு கதவு பொருத்தப்பட்டுள்-ளது. நீட்டிப்பு செய்த சில பஸ்களில் மட்டும் கதவு இல்லை. டவுன் பஸ்சில் இடம் இருந்தும் மாணவர்கள் உள்ளே செல்-லாமல், படியில் நின்று வந்துள்ளனர். வீடியோ குறித்து, தலை-வாசல் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி, படியில் தொங்கிய மாணவர்களை எச்சரிக்கை செய்துள்ளார். நீட்டிப்பு செய்த பஸ்சில் பாதுகாப்பு வசதிகள் செய்யப்படும்.இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை