முதியோர் உதவித்தொகை கிடைக்காமல் அவதி
இடைப்பாடி, நவ. 3-இடைப்பாடி தாலுகாவில் முதியோர் உதவித்தொகை, விதவை, மாற்றுத்திறனாளிகள், கணவரால் கைவிடப்பட்டோர் என, 15,000க்கும் மேற்பட்டோர் உதவித்தொகை பெற்று வருகின்றனர்.இந்நிலையில் கடந்த ஆண்டு ஜூலை முதல் தற்போது வரை, 500க்கும் மேற்பட்டோருக்கு முதியோர் உதவித்தொகைக்கு உத்தரவு நகல் வழங்கப்பட்டது. அதை பெற்றவர்கள் வங்கிகளுக்கும், தபால் நிலையங்களுக்கும் சென்று, உதவித்தொகை வந்துள்ளதா என கேட்டு ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.அதனால் மாவட்ட அதிகாரிகள், இடைப்பாடி தாலுகா அலுவலகத்தில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பாதிக்கப்பட்டோர் வலியுறுத்தினர்.