காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் கரும்பு சக்கை சாம்பல் உலரவைப்பு
வீரபாண்டி: காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் திருநீறு பிரசாதம் தயாரிக்க, பக்-தர்கள் காணிக்கையாக வழங்கிய கரும்பு சக்கைகளை எரித்த சாம்பல் உலரவைக்கப்பட்டுள்ளது.சேலம் - நாமக்கல் மாவட்ட எல்லையில் உள்ள காளிப்பட்டி கந்-தசாமி கோவிலில் கறுப்பு நிறத்தில் வழங்கப்படும் திருநீறு பிர-சாதம், மக்கள், கால்நடைகளுக்கு ஏற்பட்ட நோய்களை போக்கும் அருமருந்தாக, பக்தர்கள் நம்புகின்றனர். அங்கு பாரம்பரியமாக வழங்கப்படும் திருநீறு பிரசாதம், வெல்லம் காய்ச்ச பயன்படும் கரும்பு சக்கையால் தயாரிக்கப்படுகிறது.கோவிலுக்கு வரும் பக்தர்கள், அவர்களது நிலத்தில் கரும்பு பயி-ரிட்ட உடனே, பிரசாத திருநீறு கொண்டு வந்து தருவதாக, ஓராண்-டுக்கு முன்பே வாக்களித்து அதன்படி விரதம் இருந்து கரும்பு சக்-கைகளை எரித்து கிடைக்கும் சாம்பலை சுத்தப்படுத்தி கோவிலில் கொண்டு வந்து கொடுக்கின்றனர். அதை கோவில் வளாகத்தில் உலர வைத்து சுத்தப்படுத்திய சாம்பலை, மூலவர் முன் வைத்து சிறப்பு பூஜை செய்து வேறு எந்த கலப்புமின்றி அப்படியே பக்தர்-களுக்கு வழங்கப்படுகிறது. இதனால் மற்ற கோவில் திருநீறுகளை போல் பவுடர் போன்று இல்லாமல், கரித்துாள் கலந்த மணல் போல் இருக்கும். இது மணமில்லாவிட்டாலும் மகிமையில் சற்றும் குறைந்தது இல்லை என, பக்தர்கள் கூறினர். கந்தசஷ்டி விழாவையொட்டி பக்தர்கள் வழங்கிய சாம்பலை உலர வைத்து சுத்தம் செய்யும் பணி தொடங்கியுள்ளது.