மேலும் செய்திகள்
தேனியில் 2 கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்க முடிவு
17-Oct-2024
சேலம்: தீபாவளி பண்டிகை, வரும், 31ல் கொண்டாடப்பட உள்ளது. இதனால் ஜவுளி உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வாங்க, சேலம், கடைவீதி, புது பஸ் ஸ்டாண்ட், 4 ரோடு உள்ளிட்ட மாநகரின் பல்வேறு பகுதிகளில் நேற்றே கூட்டம் அலைமோதியது. இதனால் கடைவீதி, ஓமலுார் பிரதான சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் ஊர்ந்தபடி சென்றனர். தீபாவளி வரை, இதே நிலை காணப்படும் என்பதால் கூட்ட நெரிசலை பயன்படுத்தி மக்களிடம் திருடர்கள், சங்கிலி பறிப்பு, வழிப்பறி உள்ளிட்ட குற்றச்சம்பவங்களில் ஈடுபட வாய்ப்புள்ளது.இதை தடுக்க சேலத்தின் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து, அதில் நின்று கண்காணிக்க பணி மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. அதற்காக புதிய, பழைய பஸ் ஸ்டாண்டுகள், 4, 5 ரோடுகள், டி.வி.எஸ்., பஸ் ஸ்டாப், ஜங்ஷன் உள்ளிட்ட இடங்களில், 20 கோபுரங்கள் ஏற்படுத்தி கண்காணிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும், அந்த இடங்களில், 'சிசிடிவி' கேமரா பொருத்தியும் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து போலீசார் கூறுகையில், 'புத்தாடை வாங்க மக்கள் கூட்டம் தற்போதே காணப்படுகிறது. இதனால் குற்றங்களை தடுக்க, கோபுரங்கள் அமைக்கப்படுகின்றன. இதன்மூலம் திருடர்களை கண்டுபிடிக்கலாம். ஏராளமான போலீசார் சாதாரண உடையில் ரோந்து பணியிலும் ஈடுபட்டுள்ளனர். பொருட்களை வாங்க வரும் மக்கள், விலை உயர்ந்த பொருட்களை அணிந்து வருவதை தவிர்க்க வேண்டும்' என்றனர்.இளம்பிள்ளைஅதேபோல் இளம்பிள்ளையில் ஜவுளி வாங்க நேற்று ஏராளமானோர் குவிந்தனர். அங்கு உற்பத்தி விலைக்கே விற்கப்படுவதால், வெளியூர் கடைக்காரர்கள் வந்து மொத்தமாக ஜவுளிகளை வாங்கி சென்றனர். அவர்கள், 4 சக்கர, இருசக்கர வாகனங்களில் இளம்பிள்ளைக்கு வந்ததால் சந்தைப்பேட்டை முதல் பஸ் ஸ்டாண்ட் வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக காகாபாளையம் பிரதான சாலையில் கே.வி.பி., தியேட்டர் சாலை சந்திப்பு, சேலம் பிரதான சாலை, காடையாம்பட்டி பிரிவு சந்திப்புகளில், 4 தெருக்களில் இருந்தும் ஒரே நேரத்தில் ஏராளமான வாகனங்கள் செல்ல முயன்றதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். பண்டிகை முடியும் வரை வெளியூரில் இருந்து வரும் 4 சக்கர வாகனங்களை நிறுத்த சந்தைப்பேட்டை காலி இடத்தில் தற்காலிக நிறுத்துமிடம் அமைப்பதோடு, முக்கிய சந்திப்புகளில் போலீசார் மூலம் கண்காணித்து போக்குவரத்தை சீர்படுத்த, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
17-Oct-2024