உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / டேபிள் உடைப்பு 2 பேருக்கு காப்பு

டேபிள் உடைப்பு 2 பேருக்கு காப்பு

இடைப்பாடி, இடைப்பாடி அருகே சித்துார் கல்யாண சுப்ரமணியர் கோவிலில், முருகன் திருக்கல்யாணம் கடந்த அக்., 28ல் நடந்தது. அப்போது அதே பகுதியை சேர்ந்த பரத்குமார், பட்டா கத்தியுடன் கோவிலுக்குள் புகுந்து, அதன் நிர்வாகி ராஜாவிடம் தகராறு செய்தார். மறுநாள், பரத்குமார், 25, அவரது நண்பர்களான பாலகிருஷ்ணன், 25, கோபி ஆகியோர், ராஜா நடத்தும் மளிகை கடையில் புகுந்து அங்கிருந்த கண்ணாடி டேபிள்களை உடைத்தனர். இதுகுறித்து ராஜா புகார்படி, பூலாம்பட்டி போலீசார் விசாரித்து, நேற்று பரத்குமார், பாலகிருஷ்ணனை கைது செய்து, கோபியை தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை