தாகூர் பள்ளி மாணவர்கள் சாதனை
தலைவாசல், பிளஸ் -2 பொதுத்தேர்வு முடிவு நேற்று வெளியானது. இதில் தலைவாசல் அருகே தேவியாக்குறிச்சியில் உள்ள தாகூர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், மாவட்ட அளவில் சிறப்பான மதிப்பெண்களை பெற்று சாதனை படைத்துள்ளனர். இப்பள்ளி மாணவி தேவதர்ஷினி, 600க்கு, 595 மதிப்பெண்கள், பவித்ரா, 594, தேவர்ஷன், பூஜாஸ்ரீ, சம்ரித வர்ஷினி ஆகியோர் தலா, 592 மதிப்பெண்கள் பெற்று முறையே, முதல் மூன்று இடங்களை பிடித்தனர். பல்வேறு பாடப்பிரிவுகளில், 42 பேர், 100க்கு, 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். பள்ளி அளவில், 590 மதிப்பெண்களுக்கு மேல், 14 மாணவர்கள் பெற்றுள்ளனர். சாதனை படைத்த மாணவர்களை, தாகூர் கல்வி நிறுவன தலைவர் தங்கவேல், செயலர் பரமசிவம், பொருளாளர் ராஜா, இயக்குனர்கள், பள்ளி முதல்வர், ஆசிரியர்கள் பாராட்டினர்.