தமிழ் துறை தலைவர் பொறுப்பு பறிப்பு
ஓமலுார், சேலம் பெரியார் பல்கலை, தமிழ் துறை தலைவராக பேராசிரியர் பெரியசாமி, 13 ஆண்டாக உள்ளார். நேற்று, அப்பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டடார். இதற்கு, போலி அனுபவ சான்றிதழ், மாணவர்களிடம் ஜாதிய பாகுபாடு, கல்வி, ஆராய்ச்சி துறைகளில் வளர்ச்சிக்கான ஈடுபாடின்மை உள்பட, பல்வேறு குற்றச்சாட்டுகளால், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிகிறது.இதையடுத்து, 20 ஆண்டுகள், பல்கலை பேராசிரியராக அனுபவம் கொண்ட வேலாயுதன், தமிழ் துறை தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டார். இதற்கான உத்தரவை, துணைவேந்தர் நிர்வாக குழு வழங்கியுள்ளது.