உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தமிழக நுகர்பொருள் வாணிப கழக வட்ட செயல்முறை கிடங்கு திறப்பு

தமிழக நுகர்பொருள் வாணிப கழக வட்ட செயல்முறை கிடங்கு திறப்பு

நங்கவள்ளி: சேலம் மாவட்டம் நங்கவள்ளி அருகே பெரியசோரகையில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில், 'நபார்டு' நிதிவுதவியில், 5.23 கோடி ரூபாய் மதிப்பில், 3,000 மெட்ரிக் டன் கொள்ளளவில், வட்ட செயல்முறை கிடங்கு கட்டப்பட்டது. அதை, தமிழக முதல்வர் ஸ்டாலின், வீடியோ கான்பரன்ஸ் மூலம் நேற்று திறந்து வைத்தார்.தொடர்ந்து பெரியசோரகையில், கலெக்டர் பிருந்தாதேவி கிடங்கை பார்வையிட்டார். இதன்மூலம் மேட்டூர் வட்டத்தில், ரேஷன் கடைகள் - 183, மதிய உணவு சத்துணவு மையங்கள் - 718, முதல்வரின் காலை உணவு திட்டத்தில் செயல்படும், 150 மையங்களுக்கு தேவையான பொருட்கள் இருப்பு வைத்து பயன்படுத்த முடியும் என, அதிகாரிகள் தெரிவித்தனர். மேட்டூர் ஆர்.டி.ஓ., லோகநாயகி(பொ), வாணிப கழக மண்டல மேலாளர் ஈஸ்வரி, தி.மு.க.,வின், நங்கவள்ளி ஒன்றிய செயலர் அர்த்தநாரீஸ்வரன் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை