மேலும் செய்திகள்
தமிழ்ச்செம்மல் விருது விண்ணப்பம் வரவேற்பு
05-Aug-2025
தமிழ் செம்மல் விருதுக்கு விண்ணப்பம்
30-Jul-2025
சேலம், சேலம் கலெக்டர் பிருந்தாதேவி அறிக்கை:மாவட்டத்தில் 2025 தமிழ் செம்மல் விருதுக்கு, தமிழ் வளர்ச்சிக்கு பாடுபடும் தமிழ் ஆர்வலர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தமிழ் வளர்ச்சித்துறையின், https://tamilvalarchithurai.tn.gov.inஎன்ற வலைதளத்தில், விருதுக்கான விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தவிர சேலம் மண்டல தமிழ் வளர்ச்சித்துறை இயக்குனர் அலுவலகத்தில் நேரில் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் சுய விபர குறிப்பு, இரு புகைப்படம், ஆற்றிய தமிழ் பணி, எழுதிய நுால் விபரம், இரு தமிழ் அமைப்புகளின் பரிந்துரை கடிதம், ஆதார் நகல் ஆகியவற்றை இணைத்து, 'சேலம் மண்டல தமிழ் வளர்ச்சி துணை இயக்குனர் அலுவலகம், கலெக்டர் அலுவலக வளாகம், சேலம்' எனும் முகவரிக்கு நேரில் அல்லது அஞ்சல் மூலம் வரும், 25க்குள் அனுப்ப வேண்டும்.
05-Aug-2025
30-Jul-2025