உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தட்கல் டிக்கெட் முறைகேடு? ஆர்.பி.எப்., சோதனை

தட்கல் டிக்கெட் முறைகேடு? ஆர்.பி.எப்., சோதனை

சேலம்: ஆர்.பி.எப்., போலீசார், ரயில்வே ஸ்டேஷன்களில் உள்ள முன்ப-திவு மையங்களில் ரோந்து பணி மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக சென்னை, மதுரை, திருச்சி, சேலம் உள்பட, 6 கோட்-டத்திலும், ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் தீவிர கண்கா-ணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள், தனியார் டிக்கெட் புக்கிங் ஏஜன்சிகளிலும் சோதனை நடத்தி வருகின்றனர்.இதுகுறித்து, ஆர்.பி.எப்., போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், 'பொங்கலை முன்னிட்டு ரயில்களில் அதிக பயணியர் பயணிக்-கின்றனர். தட்கல் டிக்கெட் புக்கிங்கில் முறைகேடு நடக்க வாய்ப்-புள்ளதால், கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளோம். சில கணினி மையங்களில் அதிக பணம் பெற்று, முறைகேடாக போலி பெயர்களில் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்து கொடுப்-பதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு சேலம், ஆத்துார், மேட்டூர், தர்மபுரி, ஈரோடு, திருப்பூர், கோவை உள்-ளிட்ட இடங்களில் தொடர் சோதனை மேற்கொள்ளப்பட்டு வரு-கிறது' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை