உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சரஸ்வதி மெட்ரிக் பள்ளியில் டீ கடைக்காரரின் மகன் முதலிடம்

சரஸ்வதி மெட்ரிக் பள்ளியில் டீ கடைக்காரரின் மகன் முதலிடம்

வாழப்பாடி, வாழப்பாடி டவுன் பஞ்சாயத்து புதுப்பாளையத்தில், 'நல்லாசிரியர்' செல்லதுரை நிர்வாகத்தில், சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி செயல்படுகிறது. அப்பள்ளியில், பேளூரில் டீக்கடை நடத்தும் அறிவழகன் - தமிழ்செல்வியின் மகன் சஞ்சய் சபரி, பிளஸ் 2 படித்தார். அவர் பொதுத்தேர்வில், இயற்பியல், வேதியியல் பாடங்களில் தலா, 100க்கு, 100 மதிப்பெண்கள் பெற்றார். தமிழில், -99, ஆங்கிலம், -97, உயிரியல், -99, கணிதம், -98 என, 600க்கு, 593 மதிப்பெண்கள் பெற்று, பள்ளியில் முதலிடம் பிடித்தார். அவரை, பள்ளி நிர்வாகி, 'நல்லாசிரியர்' செல்லதுரை, முதல்வர் கோபால், இயக்குனர் அஸ்வின் பாலாஜி, ஆசிரியர்கள் பாராட்டினர். மேலும் இப்பள்ளி மாணவர் சபரி கார்த்திக், 587, ரிஷிதரன், 585 மதிப்பெண்கள் பெற்று, பள்ளி அளவில், 2, 3ம் இடங்களை பிடித்தனர். 13 மாணவ-, மாணவியர், தமிழ், இயற்பியல், வேதியியல், கணினி, கணிதம், வணிகவியல் பாடங்களில், 100க்கு, 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இப்பள்ளியில், எல்.கே.ஜி., முதல், பிளஸ் 2 வரை மாணவ-, மாணவியர் சேர்க்கை நடக்கிறது.A


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ