நுண் கீரை வளர்ப்பு தொழில்நுட்ப பயிற்சி
பனமரத்துப்பட்டி: சந்தியூர் வேளாண் அறிவியல் நிலையத்தில் ஊட்டச்சத்து நிறைந்த நுண் கீரை வளர்ப்பு தொழில்நுட்ப பயிற்சி நேற்று நடந்தது. திட்ட ஒருங்கிணைப்பாளர் விஜயன் தலைமை வகித்தார். தோட்டக்கலை தொழில்நுட்ப வல்லுனர் முல்லைமாறன், நுண்கீரை உற்பத்தி செய்யும் முறை, விதை தேர்வு, நுண் கீரையில் உள்ள ஊட்டச்சத்துகள் குறித்து விளக்கினார்.பூச்சியியல் வல்லுனர் ரவி, பயிர் பாதுகாப்பு, நோய் மேலாண்மை முறைகள் குறித்து விளக்கினார். நுண் கீரை விற்பனையில் சந்தை நிலவரம், விற்பனை உத்தி, மதிப்பூட்டல் குறித்து தொழில்நுட்ப வல்லுனர் ஆனந்த் விளக்கம் அளித்தார். சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த தொழில் முனைவோர் பயன் அடைந்தனர்.