தை அமாவாசை தரிசனம்; 35 சிறப்பு பஸ் இயக்கம்
சேலம்: தை அமாவாசையை முன்னிட்டு, நாளை (ஜன., 29) 35 சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.சேலம், தர்மபுரியில் இருந்து, மேட்டூர், மாதேஸ்வரன் மலைக்கும், சேலத்தில் இருந்து பவானி கூடுதுறை, சித்தர் கோவிலுக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. எனவே, பயணிகள் நெரிசலை தவிர்த்து பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள, சிறப்பு பஸ்களை பயன்படுத்தி கொள்ளும்படி, சேலம் கோட்ட நிர்வாக இயக்குனர் ஜோசப் கேட்டு கொண்டுள்ளார்.