உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஏத்தாப்பூரில் பல்வேறு திட்டங்களை ஒதுக்கிய முதல்வருக்கு நன்றி

ஏத்தாப்பூரில் பல்வேறு திட்டங்களை ஒதுக்கிய முதல்வருக்கு நன்றி

ஏத்தாப்பூர் :ஏத்தாப்பூர் டவுன் பஞ்சாயத்து தலைவர் அன்பழகன் அறிக்கை:ஏத்தாப்பூர் டவுன் பஞ்சாயத்தில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக, 9.64 கோடி ரூபாய் மதிப்பில், 52.11 கி.மீ., நீளச்சாலைகள் எடுக்கப்பட்டு, 24 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. 4 பணிகள் நடந்து வருகின்றன. மழைநீர் வடிகால், 1.64 கோடி ரூபாய் மதிப்பில் எடுக்கப்பட்டு, இரு பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.குடிநீர், திடக்கழிவு மற்றும் திரவ கழிவு மேலாண் பணிகளுக்கு, 3 வாகனங்கள், 0.18 கோடி ரூபாய் மதிப்பில் கொள்முதல் செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. 7வது வார்டில் புது நுாலகம், 12வது வார்டு மற்றும் 3வது வார்டில் புது பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன. உளுந்துார்பேட்டை நெடுஞ்சாலையோரம் சந்தை கட்டப்பட்டுள்ளது.இதுபோன்று டவுன் பஞ்சாயத்துக்கு பல்வேறு திட்டங்கள் ஒதுக்கிய, தமிழக முதல்வர், துணை முதல்வர், அமைச்சர், சேலம் கிழக்கு மாவட்ட செயலருக்குநன்றி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ