உழவர் சந்தையை சுற்றி கடைகள் அமைப்பு தினமும் போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதி
சேலம்: தாதகாப்பட்டி உழவர் சந்தை அருகே சாலையை ஆக்கிரமித்து கடைகள் அமைக்கப்பட்டுள்ளதால், தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள், பாதசாரிகள் அவதிக்குள்ளா-கின்றனர்.சேலம், தாதகாப்பட்டி உழவர் சந்தைக்கு தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். குறிப்பாக சனி, ஞாயிறில் கூட்டம் அதிகம் இருக்கும். அதன்படி நேற்று கூட்டம் அலைமோதியது. தவிர சந்-தையை சுற்றி சில்லரை வியாபாரிகள், சாலையை ஆக்கிரமித்து கடைகள் அமைத்துள்ளதால், வாகன ஓட்டிகள், காய்கறி வாங்க வந்த மக்கள் சிரமத்துக்கு ஆளாகினர். குறிப்பாக திருச்சி பிரதான சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.இதுகுறித்து தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் கூட்டமைப்பின் மாவட்ட தலைவர் தங்கவேல் கூறியதாவது:உழவர் சந்தை தினமும், 8 மணி நேரம் செயல்படுகிறது. அங்கு வரும் மக்கள், விவசாயிகள், வாகனம் நிறுத்த இடம் ஒதுக்கப்பட்-டுள்ளது. ஆனால் சாலையோர சில்லரை வியாபாரிகள், வாகன நிறுத்துமிடம், சாலையை ஆக்கிரமித்து கடைகள் அமைத்து வியா-பாரம் செய்கின்றனர். சந்தையை சுற்றி, 100 மீ.,ல் கடை இருக்கக்-கூடாது என, அரசு உத்தரவு இருந்தும், சாலையை ஆக்கிரமித்து வியாபாரம் செய்வதால் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படு-கிறது. மக்களும் வாகனங்களை நிறுத்த முடியாமல் சாலையில் நிறுத்தி, காய்கறி உள்ளிட்ட பொருட்களை வாங்கிச்செல்வதால் போக்குவரத்து பாதிப்பு மட்டுமின்றி விபத்துகளும் நடக்கின்றன. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.உழவர் சந்தை நிர்வாக அலுவலர் மகேந்திரன் கூறுகையில், ''சாலையை ஆக்கிரமித்து கடை வைத்ததற்கு, 10 நாட்களுக்கு ஒருமுறை கடிதம் வழங்கியுள்ளோம். அன்னதானப்பட்டி போலீசில் புகார் அளித்துள்ளோம். இதுவரை நடவடிக்கை இல்லை. இதனால் உழவர் சந்தையில் காய்கறி வாங்க முடி-யாமல் மக்கள் வெளியில் வாங்கி செல்வதால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். மாநகராட்சி நிர்வாகத்திடம், வேளாண் துறை இயக்குனர் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை,'' என்றார்.