உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 700 சதுர அடி இடத்துக்கு தகராறு தம்பியை குத்திக்கொன்ற அண்ணன்

700 சதுர அடி இடத்துக்கு தகராறு தம்பியை குத்திக்கொன்ற அண்ணன்

ஆத்துார்: சேலம் மாவட்டம் ஆத்துார் அருகே காட்டுக்கோட்டை ஊராட்சி முயல்கரட்டை சேர்ந்தவர் சின்னதுரை, 45. ரிக் வண்டியில் பணிபு-ரிகிறார். இவரது தம்பி கோபி, 35, நெல் அறுவடை இயந்திர டிரைவராக பணிபுரிந்தார். இவர்களுக்கு, 700 சதுர அடி வீட்டு மனை இடம் உள்ளது. அந்த இடத்தை, கோபி கேட்டு வந்தார். இதுதொடர்பாக நேற்று காலை, 11:00 மணிக்கு மீண்டும் தகராறு ஏற்பட்டது. அதில் ஆத்திரமடைந்த சின்னதுரை, கத்தியால் கோபியின் மார்பு பகுதியில் குத்தினார். அதில் அவர் உயிரிழந்தார். இதையடுத்து சின்னதுரை, ஆத்துார் ஊரக போலீஸ் ஸ்டேஷனில் சரணடைந்தார். கோபி உடலை கைப்பற்றிய போலீசார், சின்னது-ரையை கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ