உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தேரோட்டம் நாளை தொடக்கம்

தேரோட்டம் நாளை தொடக்கம்

ஓமலுார்: ஓமலுார் அருகே தொளசம்பட்டியில் உள்ள துளசி, அலமேலு மங்கா சமேத அப்ரமேய பெருமாள் கோவில் தேரோட்ட திருவிழா, கடந்த, 31ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இரு நாட்களாக கிருஷ்ணர், மோகினி அலங்காரத்தில் அருள்பாலித்த பெருமாளுக்கு, இன்று காலை திருக்கல்யாணம் நடக்கிறது. நாளை மாலை, சுவாமி தேரில் ஏற்றப்பட்டு, நிலை பெயர்ந்து முதல்நாள் தேரோட்டம் நடக்கும். மூன்றாம் நாளாக, வரும், 6ல் தேர் நிலை சேரும். 7ல் சத்தாபரணம், 8ல் மஞ்சள் நீராட்டம், 9ல் உற்சவ சாந்தி நடக்க உள்ளது.இன்று தொடக்கம்அதேபோல் ஓமலுார், வண்டிப்பேட்டை ஓங்காளியம்மன் கோவில் தை திருவிழா, இன்று இரவு, 8:00 மணிக்கு, கொடியேற்றி உற்சவத்துடன் தொடங்குகிறது. நாளை பால்குடம், சக்தி அழைத்தல், கோலாட்டம், நாளை மறுநாள் எருமைக்கிடா வெட்டுதல், பொங்கல் வைத்தல், பூங்கரகம் நடக்க உள்ளது. வரும், 6ல் அம்மன் சிங்க வாகனத்தில் திருவீதி உலா, 7ல் புஷ்ப அலங்கார உலா, 12ல் மறுபூஜை, அன்னதானம் நடக்க உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி