உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / விபத்தால் சிதறிய மாங்காய்கள் மீது கலெக்டர் அலுவலக கார் ஏறி கவிழ்ந்தது

விபத்தால் சிதறிய மாங்காய்கள் மீது கலெக்டர் அலுவலக கார் ஏறி கவிழ்ந்தது

தலைவாசல் :மாங்காய் லோடு ஏற்றிச் சென்ற மினி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், சிதறிக் கிடந்த மாங்காய்கள் மீது கலெக்டர் அலுவலக கார் ஏறியதில், சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.சேலம் மாவட்டம், தலைவாசல் தினசரி காய்கறி மார்க்கெட்டில் இருந்து, கள்ளக்குறிச்சி நோக்கி டிரைவர் சுந்தரம், 47, மாங்காய் லோடுகளை ஏற்றிக் கொண்டு, 'பொலிரோ' மினி வேனில் சென்றார். நேற்று அதிகாலை, 4:40 மணியளவில் தலைவாசல் மேம்பாலம் சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த மினி வேன் கவிழ்ந்தது. இதில் சாலையில் மாங்காய்கள் சிதறின. அப்போது, சேலம் கலெக்டர் அலுவலக, ஊரக வளர்ச்சித்துறையின் 'ஸ்கார்பியோ' காரில், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் மூன்று பேர், சேலத்தில் இருந்து தலைவாசல் வழியாக, சென்னை நோக்கி சென்றனர். சாலையில் சிதறிக் கிடந்த மாங்காய்கள் மீது, 'ஸ்கார்பியோ' கார் ஏறியதில், கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், காரின் மேற்பகுதி சேதமடைந்தது. கார், வேனில் சென்றவர்கள், லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.விபத்து குறித்து, தலைவாசல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை