உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கேபிள் ஒயரை வெட்டிய கும்பல்

கேபிள் ஒயரை வெட்டிய கும்பல்

ஓமலுார்: ஓமலுார், காமாண்டப்பட்டியை சேர்ந்த, கேபிள், 'டிவி' ஆப்பரேட்டர் வெங்கடேஷ், 47. இவர் நேற்று முன்தினம் ஓமலுார் போலீசில் அளித்த புகார் மனு:கேபிள் டிவி ஆப்பரேட்டராக உள்ளேன். முத்துநாயக்கன்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளில், 700 வீடுகளுக்கு செல்லக்கூடிய கேபிள் டிவி ஒயரை, மர்ம நபர்கள் வெட்டி சேதப்படுத்தியுள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி