உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பொது சிவில் சட்டம் கைவிட வேண்டும்

பொது சிவில் சட்டம் கைவிட வேண்டும்

சேலம்: வி.சி., சார்பில், திருச்சியில் நடந்த மதசார்பின்மை காப்போம் பேரணியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விளக்க பொதுக்கூட்டம், சேலம் கோட்டை மைதானத்தில் நேற்று நடந்தது. மாநகர் செயலர் காஜாமைதீன் தலைமை வகித்தார். மாநில துணை பொது செயலர் கனியமுதன் பேசுகையில், ''திருச்சி பேரணியில் அறிவித்தபடி இந்தியாவை மதச்சார்பற்ற நாடாக பாதுகாக்க வேண்டும். மத்திய அரசு கொண்டு வந்துள்ள வக்பு திருத்த சட்டம், குடியுரிமை திருத்த சட்டம் ஆகியவற்றை திரும்ப பெற வேண்டும். பொது சிவில் சட்டம் கொண்டு வருவதை கைவிட வேண்டும்,'' என்றார். மண்டல முன்னாள் செயலர் நாவரசன், மாவட்ட செயலர்கள் மொழியரசு, மெய்யழகன் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !