2026ல் இ.பி.எஸ்.,சை முதல்வராக்குவதே இலக்கு
ஓமலுார் அ.தி.மு.க.,வில் உள்ள சார்பு அணிகள், மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், ஓமலுார் அருகே உள்ள, அ.தி.மு.க., அலுவலகத்தில் நேற்று நடந்தது. சேலம் புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன் தலைமை வகித்து பேசியதாவது:சார்பு அணி நிர்வாகிகள், அந்தந்த கிளை நிர்வாகிகளுடன் ஒருங்கிணைந்து சென்று, மக்களை சந்தித்து ஓட்டு சேகரிக்க வேண்டும். கட்சி நிகழ்ச்சி, பொதுக்கூட்டம் உள்ளிட்டவற்றில், கட்சியினர் அனைவரும் பங்கேற்க வேண்டும். நம் அனைவரின் ஒரே இலக்கு, 2026ல் இ.பி.எஸ்.,சை முதல்வராக்குவதே.இவ்வாறு அவர் பேசினார்.முன்னாள் எம்.பி., சந்திரசேகரன், ஏற்காடு எம்.எல்.ஏ., சித்ரா, புறநகர் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.