உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / உயர்கல்வி படிக்கும் திருநங்கையர் கட்டணங்களை அரசே ஏற்கும்

உயர்கல்வி படிக்கும் திருநங்கையர் கட்டணங்களை அரசே ஏற்கும்

சேலம்: சேலம் கலெக்டர் அலுவலகத்தில், திருநங்கையருக்கு சிறப்பு முகாம் நேற்று நடந்தது. அங்கு, கலெக்டர் பிருந்தாதேவி ஆய்வு செய்தார்.தொடர்ந்து அவர் கூறியதாவது:சமூக நலன், தாட்கோ, வருவாய் உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பில், வழிகாட்டு அரங்குகள் அமைக்கப்பட்டு, திருநங்கையர் விபரங்களை பதிவு செய்து, அடையாள அட்டை வழங்குதல், ஆதார் அட்டையில் திருத்தம், மருத்துவ காப்பீடு அட்டை, சுய-தொழில் மானியம் மற்றும் திறன் பயிற்சி உள்ளிட்டவற்றை ஒரே இடத்தில் பெறும்படி, இந்த முகாம் நடத்தப்படுகிறது.சேலம் மாவட்டத்தில், 599 திருநங்கைகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. அதில், 197 பேருக்கு ஓய்வூதியம், 39 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. சமூக நலத்துறை சார்பில், 25 திருநங்கையருக்கு சுயதொழில் மானியம் வழங்கப்பட்டுள்ளது.திருநங்கையர் அனைவரும் அடையாள அட்டை பெறுவதன் மூலம் அரசின் அனைத்து திட்டங்களும் முழுமையாக பெற்று பயன்பெற வழி செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசால் உயர்கல்வி படிக்கும் திருநங்கையரின் கல்வி, விடுதி உள்ளிட்ட அனைத்து கட்டணங்களையும் அரசே ஏற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதை திருநங்கையர் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்-வாறு அவர் கூறினார்.இதில், 200க்கும் மேற்பட்ட திருநங்கையர் பயன் பெற்றனர். சமூக நல அலுவலர் கார்த்திகா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !