உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பூர்வீக இடத்தில் பட்டா கேட்டு மலைவாழ் மக்கள் போராட்டம்

பூர்வீக இடத்தில் பட்டா கேட்டு மலைவாழ் மக்கள் போராட்டம்

காடையாம்பட்டி: காடையாம்பட்டி, கே.மோரூர், காமராஜர் நகரில், இருளர் பழங்கு-டியினர் நிலம், 1.40 ஏக்கர் உள்ளது. அந்த பழங்குடியின மக்க-ளான, 72 குடும்பத்தினர் கே.மோரூரில் பல இடங்களில் வசிக்-கின்றனர். அவர்கள், முன்னோர் வாழ்ந்து இடத்தில் வசிக்க பட்டா வழங்க கோரிக்கை விடுத்தனர். நேற்று அக்கோரிக்கையை வலியுறுத்தி, காடையாம்பட்டி, சந்தைப்பேட்டையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.மா.கம்யூ., கிளை செயலர் ரவி தலைமை வகித்தார். மாவட்ட செயலர் சண்முகராஜா, பழங்குடியின மக்களுக்கு பட்டா வழங்க கோஷம் எழுப்பினார். சங்க மாநில பொருளாளர் ராமமூர்த்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலர் தங்கவேலு, மழைவாழ் இன மக்கள் பலர் பங்கேற்றனர். முடிவில் தாலுகா அலுவலகத்தில் மனு வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை