கும்பாபிஷேகத்துக்குமுகூர்த்தக்கால் நடல்
சங்ககிரி:சங்ககிரி ஓங்காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா, வரும் மே, 4ல் நடக்க உள்ளது. இதை முன்னிட்டு, நேற்று முகூர்த்தக்கால் நடும் விழா நடந்தது. அர்ச்சகர்கள் பூஜை செய்தனர். தொடர்ந்து திருப்பணி கமிட்டியார்கள், ஊர்மக்கள் உள்ளிட்டோர் இணைந்து, முகூர்த்தக்கால் நட்டனர். தொடர்ந்து ஏராளமானோர் வழிபட்டனர்.