உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / லாரி டிரைவரை வெட்டி கொன்றவர் தப்பிய போது போலீசில் சிக்கினார்

லாரி டிரைவரை வெட்டி கொன்றவர் தப்பிய போது போலீசில் சிக்கினார்

ஆத்துார்:சேலம் மாவட்டம் ஆத்துார் அருகே ராமநாயக்கன்பாளையம் ஊராட்சி, கொசவன்காட்டைச் சேர்ந்தவர் சுப்ரமணியன், 45, தி.மு.க., கிளை செயலர். அதே பகுதியை சேர்ந்த, அங்கமுத்து மகன் முருகன், 24. லாரி டிரைவர். இவருக்கும், சுப்ரமணியனுக்கும் இடையே, விவசாய நிலத்துக்கு செல்லும் பாதை தொடர்பாக முன்விரோதம் இருந்தது. கடந்த மாதம் ஏற்பட்ட தகராறில் இருதரப்பினரும், ஆத்துார் ஊரக போலீசில் புகார் அளித்தனர். போலீசார் விசாரித்து சமாதானப்படுத்தி அனுப்பினர்.இந்நிலையில் நேற்று காலை, 9:30 மணிக்கு, 'ேஹாண்டா' பைக்கில் முருகன், அவரது விவசாய தோட்டம் அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது சுப்ரமணியன் வழிமறித்து அரிவாளால் தலை மற்றும் காலில் வெட்டினார். அதில் முருகன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.போலீசார், முருகனின் உடலை எடுக்க சென்றனர். ஆனால், அவரது உறவினர்கள், உடலை எடுக்க விடாமல் வாக்குவாதம் செய்தனர். ஆத்துார் டி.எஸ்.பி., சதீஷ்குமார் பேச்சு நடத்தி, உடலை எடுத்து சென்றார்.இருப்பினும் மதியம், 3:00 மணிக்கு கொத்தாம்பாடி பஸ் ஸ்டாப், சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர். அப்போது, கொலை செய்த சுப்ரமணியன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். போலீசார், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதனால், 4:00 மணிக்கு அனைவரும் கலைந்து சென்றனர். பின், சுப்ரமணியன் மீது கொலை வழக்கு பதிந்தனர்.இதற்கிடையே காலை, 10:00 மணிக்கு நெஞ்சு வலிப்பதாகக் கூறி சுப்ரமணியன், ஆத்துார் அரசு மருத்துவமனைக்கு வந்தார். இதை அறிந்து போலீசார் அங்கு வந்தபோது, அவர் தப்பி ஓடிவிட்டார்.அங்குள்ள, 'சிசிடிவி' கேமராவை ஆய்வு செய்தனர். பின் ஆத்துார், காமராஜர் சாலையில் தப்பி சென்ற சுப்ரமணியனை, போலீசார் சுற்றி வளைத்தனர். அவரிடம் கொலை குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை