உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / புகையிலை பொருள் விற்பனை தலைமறைவாக இருந்தவர் கைது

புகையிலை பொருள் விற்பனை தலைமறைவாக இருந்தவர் கைது

வாழப்பாடி: வாழப்பாடி, கிழக்காடு பகுதியில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக, வாழப்பாடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. கடந்த மே, 7ல், அப்பகுதியில் உள்ள செல்வராஜ் வீட்டில் சோதனை செய்தனர். அப்போது வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த, 2.30 லட்சம் மதிப்பிலான, 740 கிலோ ஹான்ஸ், கூலிப் உள்ளிட்ட, 70 மூட்டை பறிமுதல் செய்தனர். வழக்கு பதிவு செய்து, தலைமுறைவான செல்வராஜை போலீசார் தேடி வந்தனர்.இதையடுத்து, தலைமறைவாக இருந்த அனுப்பூரை சேர்ந்த செல்வராஜ், 43, என்பவரை வாழப்பாடி போலீசார் நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி