உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சண்டையை வீடியோ எடுத்தவருக்கு தர்ம அடி

சண்டையை வீடியோ எடுத்தவருக்கு தர்ம அடி

சேலம்:சேலம், கருப்பூர் கோட்டகவுண்டம்பட்டியை சேர்ந்தவர் திவாகரன், 29. அதே பகுதியில் கடை வைத்து, 'சவுண்ட் சிஸ்டம்' தொழில் செய்கிறார். அதன் அருகே வசிக்கும் பரமசிவம் குடும்பத்தினர், ராம்மோகன், அவரது சம்பந்தி ராஜேந்திரன் குடும்பத்தினர் இடையே நேற்று தகராறு ஏற்பட்டது. இச்சண்டையை, திவாகரன் மொபைல் போனில் வீடியோ எடுத்தார்.இதை ராஜேந்திரன் குடும்பத்தினர் தட்டிக்கேட்டு திவாகரனுக்கு தர்ம அடி கொடுத்து, கொலை மிரட்டல் விடுத்தனர். சண்டையை தடுத்த பாலமுருகன் என்பவருக்கும் அடி விழுந்தது. தாக்குதலில் காயம் அடைந்த திவாகரன், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது வாக்குமூலப்படி, கருப்பூர் போலீசார், ராஜேந்திரன் குடும்பத்தினர் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ