மேலும் செய்திகள்
பக்தர்கள் பாதயாத்திரை
30-Jul-2025
சேந்தமங்கலம், எருமப்பட்டி அருகே, முட்டாஞ்செட்டியில் பிரசித்தி பெற்ற மாசி கருப்பர், பெரிய கருப்பர், சின்ன கருப்பர் என, கருப்பசாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆடி மாதம் முப்பூஜை விழா நடப்பது வழக்கம். அதன்படி இந்தாண்டு நடந்த விழாவில், நாள் முழுவதும் அரிவாள் மீது நின்று பக்தர்களுக்கு பூசாரி அருள்வாக்கு கூறினார். பக்தர்கள், குழந்தை பாக்கியம், கடன் பிரச்னை, வீடு கட்டும் பணி, வேலை போன்ற வாக்குகளை கேட்டு தெரிந்து கொண்டனர். முடிவில் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானமாக அசைவ உணவு பரிமாறப்பட்டது. இந்த பூஜையில், சேந்தமங்கலம் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
30-Jul-2025