பெண்களுக்கு ரூ.1,000 குடும்ப பொறுப்பே காரணம்
சேலம்: துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாள், அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம், சேலம், செவ்வாய்ப்பேட்டை பகுதி, தி.மு.க., சார்பில், நேற்று நடந்தது. சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் தலைமை வகித்தார்.அதில் தமிழ்நாடு பாடநுால் கழக தலைவர் லியோனி பேசியதா-வது:தமிழகத்தில் உள்ள, 38 மாவட்டங்களில், 22ல் பெண்கள் கலெக்-டர்களாக உள்ளனர். அதுதான், 'திராவிட மாடல்' அரசு. புது-மைப்பெண் திட்டத்தில் மாதம், 1,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்குவதன் மூலம், 3.27 லட்சம் பெண்கள் பயன்பெறுகின்-றனர். தொடர்ந்து தமிழ்ப்புதல்வன் திட்டத்தில், 1,000 ரூபாய் வழங்குவதன் மூலம், கல்லுாரிகளில் சேரும் மாணவ, மாணவியர் எண்ணிக்கை, 4 லட்சமாக அதிகரித்துள்ளது. அதன்மூலம் பெண்-களுக்கு கல்வி தந்த அரசாக தி.மு.க., உள்ளது. பெண்களுக்கு, 1,000 ரூபாய் கொடுக்க காரணம், அவர்களுக்கு தான் குடும்ப பொறுப்பு உள்ளது. அதனால் குடும்பமும் பயன்பெறும்.இவ்வாறு அவர் பேசினார்.எம்.பி., செல்வகணபதி, மாவட்ட அவைத்தலைவர் சுபாஷ், மாநகர் செயலர் ரகுபதி, செயற்குழு உறுப்பினர் தாமரைக்-கண்ணன், பகுதி செயலர் பிரகாஷ், பேச்சாளர்கள் திவ்யா, நாகராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.