உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / உருக்காலை லாபம் ஈட்டும் என்பதால் தனியார் மய பாதிப்பில் மீண்டுள்ளது

உருக்காலை லாபம் ஈட்டும் என்பதால் தனியார் மய பாதிப்பில் மீண்டுள்ளது

சேலம், ராஜ்யசபா எம்.பி.,யும், மத்திய தொழிற்சாலைகள் நாடாளுமன்ற நிலைக்குழு தலைவரான சிவா, சேலம் உருக்காலையில் நேற்று ஆய்வு செய்தார். ஆலை நிர்வாக இயக்குனர் சர்க்கார் உள்ளிட்ட உயரதிகாரிகளுடன் ஆலோசித்தார்.தொடர்ந்து, எம்.பி., கூறியதாவது: முதல்வர் ஸ்டாலின் முயற்சியால், மத்திய கனரக தொழிற்சாலைகள் துறை அமைச்சர் குமாரசாமியிடம் வைத்த கோரிக்கைப்படி, தற்போது உருக்காலையை மேம்படுத்த, பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதனால் ஆலை மீண்டும் புத்துயிர் பெற்று, அதிக லாபம் ஈட்ட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.சேலத்தில் ஏற்கனவே மூடும் நிலைக்கு வந்த, எஸ்.ஆர்.சி.எல்., நிறுவனம், உருக்காலை நிறுவனத்துடன் இணைக்கப்பட்டு விட்டதால் அது லாபம் ஈட்டி வருகிறது. அதனால் தொழிலாளர்களுக்கு ஊதிய விகிதம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் உருக்காலையும் கண்டிப்பாக லாபத்தை ஈட்டும் என்பதால், தனியார் மயம் எனும் பாதிப்பில் இருந்து வெளி வந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், தொ.மு.ச., நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை