உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கடன் தொல்லை வாலிபர் விபரீதம்

கடன் தொல்லை வாலிபர் விபரீதம்

பனமரத்துப்பட்டி, பனமரத்துப்பட்டி, குரால்நத்தம் பிடாரி அம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் கருப்பண்ணன், 32. மாடு வாங்கி விற்கும் தொழில் செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி, மனைவி உள்ளார். சமீபத்தில் புது வீடு கட்டி குடியேறினார். மனைவி இரு நாட்களுக்கு முன் தாய் வீட்டுக்கு சென்றிருந்தார். இந்நிலையில் நேற்று புதிதாக கட்டிய வீட்டில், சேலையால் துாக்கிட்டு கருப்பண்ணன் தற்கொலை செய்துகொண்டார். பனமரத்துப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.போலீசார் கூறுகையில், 'புது வீடு கட்ட நிறைய கடன் வாங்கியுள்ளார். கடன் தொல்லையால் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்' என்றனர்.மற்றொரு சம்பவம்அதேபோல் பூலாவரியை சேர்ந்தவர் தனபால், 40. பட்டு ரக நுால் தொழில் செய்து வந்தார். பனமரத்துப்பட்டி, குரால்நத்தம் சின்ன பிடாரி அம்மன் கோவில் அருகே இரு நாட்களாக, யுனிகான் பைக் நின்றிருந்தது. இதுகுறித்து பனமரத்துப்பட்டி போலீசார் விசாரித்தபோது, அங்குள்ள கரடு அடிவாரம், தனபால் இறந்து கிடந்தார். உடலை கைப்பற்றி போலீசார் விசாரித்தனர். போலீசார் கூறுகையில், 'குடும்ப பிரச்னையில் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து இறந்துள்ளார். இருப்பினும் தொடர்ந்து விசாரிக்கிறோம்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை