உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தொழிலாளி வீட்டின் சுவர் மழையால் இடிந்தது

தொழிலாளி வீட்டின் சுவர் மழையால் இடிந்தது

மேட்டூர்,மேட்டூர், துாக்கனாம்பட்டியில் ஓட்டு வீட்டில் வசிப்பவர், சலவை தொழிலாளி சிரஞ்சீவி, 62. மனைவி மல்லிகா, 55. மேட்டூரில் சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்தது. நேற்று காலை, 9:00 மணிக்கு சிரஞ்சீவி, வீடு வெளியே துணி தேய்த்துக்கொண்டிருந்தார். அப்போது அவரது வீட்டின் ஒருபுற சுவர், மழைநீர் புகுந்து இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு இல்லை. மேட்டூர் ஆர்.ஐ., வெற்றிவேல் உள்ளிட்ட வருவாய்த்துறையினர், சம்பவ இடத்தை பார்வையிட்டனர். வி.ஏ.ஓ., விஜயகுமார் அறிக்கைப்படி, தாசில்தார் ரமேஷ், இடிந்த வீட்டின் உரிமையாளர் சிரஞ்சீவிக்கு அரசு இழப்பீடு வழங்க பரிந்துரை செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி