உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / திருட்டு வழக்கு: கைதியிடம் விசாரணை

திருட்டு வழக்கு: கைதியிடம் விசாரணை

தலைவாசல், பெரம்பலுார் மாவட்டம் வேப்பந்தட்டை, நெற்குணத்தை சேர்ந்த, விவசாயி ராஜ்மோகன், 50. இவர் கடந்த மே, 15ல், சேலம் மாவட்டம் வீரகனுாரில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் அடகு வைத்திருந்த நகையை மீட்டு, அதனுடன், 57,000 ரூபாயை, 'யுனிகான்' பைக் பெட்டியில் வைத்தார். அங்குள்ள சந்தைப்பேட்டையில் பைக்கை நிறுத்தி கடைக்கு சென்றபோது, பைக் பெட்டியில் இருந்த, 4 பவுன் வளையல், 57,000 ரூபாய் திருடுபோனது தெரிந்தது. வீரகனுார் போலீசார் விசாரித்து, திருச்சி, சுருளிகோவிலை சேர்ந்த கணேசன், 60, அவரது மகன் ராகவன், 36, ஆகியோர் நகை திருடியது தெரிந்தது. மே, 22ல், ராகவனை, போலீசார் கைது செய்தனர். ஆனால் கணேசன், மே, 19ல், நாமக்கல், எருமப்பட்டியில் நடந்த திருட்டு வழக்கில், ஏற்கனவே கைதாகி, சேலம் மத்திய சிறையில் இருந்தது தெரியவந்தது. இதனால் நேற்று முன்தினம், வீரகனுார் போலீசார், கணேசனை, காவலில் எடுத்து விசாரித்தனர். பின் நேற்று, சிறையில் அடைத்தனர். ஆனால் நகை திருட்டு தொடர்பாக, தந்தை, மகன் கூறுவது முரண்பாடாக உள்ளதால், திருடுபோன நகையை மீட்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை