உயர்கோபுரம் இருக்கு மின்விளக்கு இல்லை
இளம்பிள்ளை: இளம்பிள்ளை அருகே சித்தர்கோவில் பஸ் ஸ்டாப் அருகே, 4 ரோடு சந்திப்பு பகுதி உள்ளது. அங்கு சில மாதங்களுக்கு முன் சாலை விரிவாக்கப்பணி முடிந்து, உயர்கோபுரம் அமைக்கப்பட்-டது. ஆனால் மின் விளக்குகள் பொருத்தப்படவில்லை. அருகே சித்-தர்கோவில் உள்ளதால் எந்த நேரமும் வாகன போக்குவரத்து உள்ள சேலம் - இளம்பிள்ளை பிரதான சாலையில், இருளால் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. இதுகுறித்து அப்ப-குதி மக்கள், நெடுஞ்சாலை துறைக்கு தகவல் தெரிவித்தும் இது-வரை நடவடிக்கை எடுக்கவில்லை என, அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர்.