மேலும் செய்திகள்
வெளிநாடு செல்ல திட்டம் விபத்தில் பட்டதாரி பலி
24-Sep-2025
ஆத்துார்: ஆத்துார் அருகே தம்மம்பட்டியில், அ.தி.மு.க., சார்பில் ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. அதில், வரும், 15ல், தம்மம்பட்டி, செந்தாரப்பட்டி டவுன் பஞ்சாயத்துகளை கண்டித்து, தம்மம்பட்டி பஸ் ஸ்டாண்ட் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது குறித்து, நிர்வாகிகளுடன் ஆலோசிக்கப்பட்டது.தொடர்ந்து சேலம் புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன் பேசியதாவது:தம்மம்பட்டி, செந்தாரப்பட்டி டவுன் பஞ்சாயத்துகளில், நிர்வாக சீர்கேடு அதிகளவில் உள்ளது. வரும், 13ல், தி.மு.க., கவுன்சிலர் ஒருவர், 'குடிநீர் குழாய் அமைப்பதை அரசியல் காழ்ப்புணர்ச்சியால் தடுக்கும் தனி நபரை கண்டித்து கால வரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளார். அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு தெரிவிக்கும்படி, தி.மு.க., கவுன்சிலரின் அறிவிப்பு உள்ளது.தம்மம்பட்டியில், 4 ஆண்டுகளில், 6 செயல் அலுவலர்கள் இடமாற்றப்பட்டுள்ளனர். ஆளுங்கட்சியினரின் நெருக்கடியால், இடமாறுதலில் சென்று விடுகின்றனர். பொறுப்பு செயல் அலுவலர்களால், திட்டப்பணிகளை மேற்கொள்ள முடிவதில்லை. இரு டவுன் பஞ்சாயத்துகளில் நடந்துள்ள முறைகேடுகளை விசாரித்து நடவடிக்கை எடுக்கக்கோரி போராட்டம் நடக்க உள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.
24-Sep-2025