உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ரூ.2.88 லட்சம் பறித்தவர்கள் மேலும் சில இடத்தில் கைவரிசை

ரூ.2.88 லட்சம் பறித்தவர்கள் மேலும் சில இடத்தில் கைவரிசை

சேலம்: சேலம், காமநாயக்கன்பட்டி, ராஜா பட்டறையை சேர்ந்தவர் வசந்தா, 58. இவர் கடந்த, 19ல், சாரதா கல்லுாரி சாலையில் உள்ள ஏ.டி.எம்., மையத்தில் பணம் எடுக்க முயன்றார். அப்போது மர்ம நபர் அவரது கார்டுக்கு பதில் வேறு கார்டை கொடுத்தார். தொடர்ந்து அவரது கார்டில், 2.88 லட்சம் ரூபாய் எடுத்தார். வசந்தா புகார்படி, அழகாபுரம் போலீசார் விசாரித்தனர். கமிஷனர் பிரவீன்குமார் அபினபு உத்தரவுப்படி தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள், ஏ.டி.எம்., மையத்தில் உள்ள, 'சிசிடிவி' காட்சிகளை ஆய்வு செய்ததில், மர்ம நபர்களின் படம் பதிவாகி இருந்தது.அதை வைத்து விசாரித்ததில் அந்த மர்ம நபர்கள், கோவை, திருச்செந்துார், ஈரோடு, நாமக்கல், திருச்சி மாவட்டங்களில் கைவரிசை காட்டியதும் தெரிந்தது. அவர்களை சேலம் முழுதும் தேடிய நிலையில் காணவில்லை. வேறு மாவட்டத்துக்கு சென்றது தெரியவர, தனிப்படையினர் தொடர்ந்து தேடிவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !