சட்டம்-ஒழுங்கு சீர்கேடு போராட த.மா.கா., முடிவு
ஓமலுார்: த.மா.கா.,வின், சேலம் மேற்கு மாவட்ட செயற்குழு கூட்டம், ஓமலுாரில் நேற்று நடந்தது. தலைவர் சுசீந்திரகுமார் தலைமை வகித்தார். அதில் நாளை மூப்பனார் பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாடுவது; பூத் கமிட்டி கூட்டம் நடத்துவது; தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்கேடு குறித்து போராட்டம் நடத்துவது என்பன உள்பட, 10 தீர்மானங்கள் நிறை-வேற்றப்பட்டன. தொடர்ந்து புது நிர்வாகிகள், துணை அமைப்பு நிர்வாகிகள், நிய-மன ஆணைகள் வழங்கப்பட்டன. சேலம் புறநகர் மாவட்ட தலைவர் ராஜேந்திரன், மாநில தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்-கிணைப்பாளர் ரகுநந்தகுமார், வட்டார தலைவர்கள் சேதுராமன், பாக்கியராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.