உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / புகையிலை இல்லாத பகுதி பள்ளிகள் அருகே எல்லைக்கோடு

புகையிலை இல்லாத பகுதி பள்ளிகள் அருகே எல்லைக்கோடு

சேலம்: பள்ளிகள் அருகே, 'புகையிலை இல்லாத பகுதி' குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சேலத்தில் எல்லைக்கோடு வரையப்பட்டுள்ளது. பள்ளி, கல்லுாரிகள் அருகே, 300 அடி சுற்றளவில் புகையிலை பொருட்களை கட்டாயம் விற்பனை செய்யக்கூடாது என்ற விதி உள்ளது. இது குறித்து, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் எல்லைக்கோடு வரைய வேண்டும் என, மத்திய கல்வி அமைச்சகம் அனைத்து மாநிலங்களுக்கும் அறிவுறுத்தியுள்ளது.இதையடுத்து, சேலம் நாராயண நகர் பாவடி மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முன், சாலையின் இறுபுறத்திலும் தலா, 100 மீட்டர் துாரத்தில் எல்லைக்கோடு வரைந்து 'புகையிலை தடை செய்யப்பட்ட பகுதி' மற்றும் ஆங்கிலத்தில் 'டெபாக்கோ பிரி ஜோன்' என எச்சரிக்கை வாசகங்கள் எழுதி வைக்கப்பட்டுள்ளது. இதே பகுதியில் உள்ள, அரசு உதவி பெறும் பள்ளியின் முன்புறம் உள்ள தார்ச்சாலையில், எல்லைக்கோடு வரைந்து எச்சரிக்கை வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ